கல்முனை ஸ்ரீ தரவப்பிள்ளையார் ஆலய செயலாளர் வரதன் வாகன விபத்தில் பலி
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனை -03ஆம் குறிச்சியை சேர்ந்த அப்புக்குட்டி வரதராஜன் (58)என்பவர் மரணமடைந்துள்ளார் .
இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 10.30மணிக்கு சாய்ந்தமருது பிரதான வீதியில் ரெட் சில்லி ஹோட்டலுக்கு முன்பாக இடம் பெற்றுள்ளது
திருக்கோவிலில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்களில் பயணிக்கும் போது நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
தலையில் ஏற்பட்ட பலமான காயத்தினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வரதராஜன் என்பவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதன் பின்னர் மரணமடைந்தார் .
கல்முனை ஸ்ரீ தரவப்பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை கண்ணகி அம்மன் ஆலயங்களின் அறப்பணி புரிகின்ற இவர் 03 பிள்ளைகளின் தந்தையாவார் .
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளதுடன் விசாரணை நடாத்தப் படுகிறது . இறந்தவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது .
Comments
Post a Comment