நீதிமன்றங்களுடைய வேலைப் பளுவைக் குறைப்பதற்கு மத்தியஸ்த சபைகள் துணைபுரிகின்றன

நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.மன்சூர் 

PMMA.காதர் 
முரன்பாடு முகாமைத்துவம் என்பது மிகப்பெரிய ஒரு கலை முரண்பாடு நல்லது  அல்லது கெட்டது என்பதைப் பார்க்க அதை கையாளுகின்ற விதத்தில்தான் அதன் வெற்றியும்  தோல்வியும்  இருக்கின்றது.தற்காலத்திலே முகாமைத்துவம் என்பது விஞ்ஞான ரீதியாக ஒரு ஆயூள் கலையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது என நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர்(நிருவாகம்)ஏ.மன்சூர் தெரிவித்தார்.

கல்முனை மத்தியஸ்த சபைக்கான உறுப்பினர்களை ஆட்சேர்ப்பதற்கான மத்தியஸ்த திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய ஐந்து நாள் பயிற்சிப்பட்டறை திங்கள் கிழமை(27-11-2017)பிரதேச செயலக கூட்ட மண்பத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயிற்ச்சி பட்டறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்.தமிழ்.சிங்கள சமூகங்களைச் சேர்ந்த  அறுபத்தாறு பேர் பங்குபற்றினார்கள்.இங்கு நீதிஅமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த ஆணைக்குழுவைச் சேர்ந்த மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்களான வி.சவரிநாயகம், செ.விமலராஜா, எம்.ஐ.எம்.ஆசாத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
இங்கு நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர்(நிருவாகம்)ஏ.மன்சூர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- மத்தியஸ்த சபைகள் மிக நீண்ட காலமா நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த ஆணைக் குழுவின் ஊடாக இயங்கி வருகின்றது. இந்த மத்தியஸ்த சபைகள் பிரதேச செயலக மட்டங்களிலே அகில இலங்கை ரீதியாக நடைபெறுவதன் ஊடாக நீதி அமைச்சினுடைய நீதிமன்றங்களின் வேலைப் பழு வெகுவாக குறைந்திருக்கின்றது.
நாளுக்குநாள் நீதிமன்றங்களின் வேலைப்பளு அதிகரித்துச் செல்கின்ற சூழ்நிலையில் நீதிமன்றங்களுடைய வேலைப் பளுவைக் குறைப்பதற்கு உத்தேசித்து  அரசாங்கம் நீதி அமைச்சின் கீழ் ஒரு மத்தியஸ்த ஆணைக்குழுவை நிறுவி அதன் ஊடாக அகில இலங்கை ரீதியாக பிரதேச செயலக மட்டங்களிலே இவ்வாறான மத்தியஸ்த சபைகளை உருவாக்கி அந்த சபைகளின் மூலம் மத்தியஸ்தம் செய்வதன் ஊடாக முரன்பாடுகளைத் தீர்த்துக்கொள்கின்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒவ்வொரு  விடயத்திலும் ஆரம்பம் முதல் முடிவு  வரையும் முகாமைத்துவம் இருக்கிறது.நம்மை நாமே முகாமைத்துவம் செய்வதில் இருந்து பல்வேறு மட்டங்களிலும் முகாமைத்துவம் செயற்படுகின்றது.அதிலே பல அமைப்புக்களும்  பல அம்சக் கூறுகளும் இருக்கின்றது.எந்த விடயமாக இருந்தாலும் செய்வதற்கு முன் சிந்திக்க வேண்டும் அதை முன் உணர்வு  என்று சொல்வார்கள்.
அந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக திட்டமிடல் வருகின்றது திட்டமிடல் என்பது மாற்று வழிகளுக்குள் சிறந்த வழியை இனங்காணுவது ஒவ்வொரு விடையத்திற்கும் மாற்று வழிகள் இருக்கும் அந்த மாற்று வழிகளுள் சிறந்த வழிகளை இனங்காணுவது திட்டமிடலிலே சிறந்த வழியாக முக்கியத்துவம் பெறுகின்றது.அவ்வாறு ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல், மீளாய்வு  செய்தல் என்கின்ற பல கூறுகளை உள்ளடக்கியதுதான் முகாமைத்துவமாகும்.
அதே போன்று முரண்பாட்டு முகாமைத்துவம் என்பதும் இந்தக் கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.முரண்பாடு இல்லாவிட்டால் நவீன உலகம் வந்திருக்காது புதிய கண்டு பிடிப்புக்கள் வந்திருக்காது புத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்காது மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது எல்லா மாற்றங்களுக்கும் முரண்பாடுகள் காரணமாக இருக்கின்றது அழிவுக்கும் அது காரணமாக இருக்கின்றது எனவே அது அழிவா புத்தாக்கமா புதுக்கண்டுபிடிப்பா என்பது அதைக் கையாளுகின்ற விதத்தில் இருக்கின்றது.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் முரண்பாடுகள் முற்றாமல் இருந்திருந்தால் முப்பது வருடம் பயங்கரவாதம் இருந்திருக்காது அப்போது  கையாளுவதில் இருந்த சில குறைபாடுகள் அழிவுகளைக் கொண்டுவந்து முடிவு  இப்போது எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்கின்றது எனவே சரியாக கையாளாவிட்டால் பின் விளைவு  எப்படி வரும் என்று சொல்ல முடியாது இதுதான் முரண்பாடு எனவே கையாளுகின்றவர்கள், முகாமை செய்கின்றவர்கள் சந்தர்ப்பம் கையில் இருக்கின்ற பொழுது அதைச் சரியாகச் செய்யாவிட்டால் அது பாதகமாக முடிந்து விடும்.
எனவே மத்தியஸ்த்தத்தைப் பொறுத்த வரையிலே முரண்பாடுகளுக்கு முகாமை செய்வது மிகப்பெரிய பணியாக் காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.






Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்