சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

நாட்டில் தற்சமயம் நிலவும் வலுவான காற்றுடன்கூடிய அடைமழையினால் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். காலி கம்பஹா பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் இடமபெற்றுள்ளன.
 
13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நான்காயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகும். 
  
இதுவரை ஐந்து பேர் காணாமற்போய்யுள்ளனர். 202 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
 
பகுதியளவில் 3 ஆயிரத்து 236 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. ஒன்பது பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு;ள்ளன.
இவற்றில் 179 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 36 பேர் இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.  
 
இதேவேளை நுவரெலியா பிரதேசத்தில் 14 கிராமங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு;ளளன. இங்கு 51 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மண்சரிவினால்,42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என;று நுவரெலியா பிரதேச செயலாளர்  தெரிவித்தார்.
 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!