இரண்டு மணித்தியால மழை கல்முனை நகரில் வெள்ளம் கரைபுரண்டது


இன்று காலை(27) அம்பாறை மாவட்டத்தில் பெய்த பெரு மழையினால் கல்முனை நகரத்தின் பிரதான வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கின. 


இதன் காரணமாக கல்முனை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பொது மக்களுக்கு அசௌகரியமும் ஏற்பட்டன. 



இன்று காலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையான இரண்டு மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பெரு மழை பெய்ததது. இதனால் பல தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கின. கல்முனை பொலிஸ் நிலைய வீதி மற்றும் கல்முனை ஹிஜ்ரா வீதி என்பன முற்றாக வெள்ள நீர் பாய்ந்ததால் போக்குவரத்து சேவைகள் நெரிசல் காணப்பட்டதுடன் அரச  அலுவலகங்களுக்கு செல்லும் உத்தியோகத்தர்களும் பரீட்சைக்கு சென்ற மாணவர்களும் சிரமத்துடன் சென்றதை அவதானிக்க முடிந்தது. 



இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசியதால் மின் தடையும் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேங்களிலும் ஏற்பட்டிருந்தன.









Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது