தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் டிச. 15 வரை ஏற்கப்படும்
தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் டிச. 15 வரை ஏற்கப்படும்
தற்போது வேட்பு மனு கோரப்பட்டுள்ள, சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை, குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
குறித்த முடிவுத் திகதி மீண்டும் நீடிக்கப்படாது எனவும், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு ஆணையகம் மேலும் அறிவித்துள்ளது.
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரல் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு டிசம்பர் 13 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்தவும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யவும் முடியும் என தேர்தல்கள் ஆணையகம் நேற்று (27) அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment