கல்முனையை 4ஆக பிரிக்க தமிழ் முஸ்லீம் தரப்பு உறுதி எல்லை பிரச்சினைக்கு தீர்வு இல்லை

கல்முனை 4 சபைகளாக பிரிப்பது உறுதியாகிவிட்டது.தற்பொழுது நடைபெறும் பிரச்சினைகள் எல்லைப்பிரச்சினைகளாகும் - கல்முனை வடக்கு - தமிழா் பிரதேசம் கல்முனை முஸ்லீம் பிரதேசம். , - கல்முனை நகரம் ஆகிய எல்லைப்  பிரச்சினையே  நடைபெற்று வருகின்றன. 
இப் பிரச்சினை சம்பந்தமாக இன்று (22) பி.பகல் 05.00 -07.00 மணிவரை எதிா்க்கட்சித் தலைவா் இரா சம்பந்தன் அவா்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித தீா்மானமும்  எட்டவில்லை- மீண்டும் டிசம்பா் 10ஆம் திகதி இதே அரசியல் தலைவா்களுடன் கல்முனை பள்ளிவாசல் சம்மேளனம். தமிழா் மகா சபை பிரநிதிகள் ஒன்று கூடவுள்ளனா். தமிழா்கள் கல்முனை நகரம் எல்லை சம்பந்தமான  அவா்களது அறிக்கை அமைசச்சர்  ஹக்கீமிடமும் கையளிக்கப்பட்டது.முஸ்லீம்களது எல்லைகள் அறிக்கை இராசம்பந்தனிடம் இன்று கையளிக்கப்பட்டது. 
இன்றைய சந்திப்பில் அமைச்சா் ரவுப் ஹக்கீம்,எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன் பிரதியமைச்சா் எச்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான  சுமந்திரன், கோடிஸ்வரன் ,தேசிய காங்கிரஸ் தலைவா் ஏ.எல்.எம் அதாவுல்லா, தேசிய ஜக்கிய முன்னணித்  தலைவா் அசாத் சாலி ,வை.எம்.எ தலைவா் நபீல் ஆகியோரும்  கலந்து கொண்டனா் 







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்