தீக்குளித்த தேரர் தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்கள்
தீக்குளித்தது தற்கொலை செய்துகொண்ட போவத்தே இந்திர ரத்ன தேரர் அவரின் மரணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று சிங்கள இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திர ரத்ன தேரர் முன்னர் பிரதேச சபை உறுப்பினராக இருக்கும்போது, மின்சார சபையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 20 இலட்சமும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக்கூறி 10 இலட்சமும் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் . இவ்விடயத்தில் பிக்குவை கைதுசெய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என குறித்த சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் அது வெளியிட்டுள்ள தகவலில் , தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்க வந்தபோது, பிக்குகள் கூட்டத்திலிருந்து கூச்சலிட்டவர்என்றும் , பாதுகாப்பு படையினருக்கு தான் அணிந்திருந்த சிவுறவை அவிழ்த்துக் காட்டினார் என்றும் கடந்த வருடம் வீரகெட்டியவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல், அதே ஊரில் இவ்வருடம் பள்ளிவாசல் மீது தாக்குதல் ஆகியவற்றை குறித்த தேரர் நடாத்தியுள்ளார் என்றும் அந்த சிங்கள இணையத்தளம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
தீக்குளித்து மரணமான போவத்த இந்தரத்தன தேரரின் இறுதி கிரியைகள் இன்று மாலை பொரனுவ மைதானத்தில் இடம் பெற்றது.ஜாதிக ஹெல உறுமய, பொது பல சேனா , சின்ஹல ராவைய ஆகியவற்றின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகமாக இதில் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு அமைச்சரை பாட்டாளி சம்பிக்க ரணவக்க உரையாரியுள்ளார் , பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்னவும் இறுதி ஊர்வலத்தில் உரையாற்றியுள்ளார் .அமைச்சர் ஜோன் செனவிரட்ன உரையாற்றும்போது சில தேரர்களும் ,அவர்களின் ஆதரவாளர்கள் சிலரும் கூச்சல் எழுப்பியுள்ளனர் .
இதுதவிர, காவத்தை பிரதேசத்தில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரதேசத்தின் மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டிருந்த நிலையில் கஹவத்த, பகுதியில் மஞ்சள் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது . நீதிமன்ற உத்தரவில் பிரகாரம் பொலிசாரின் பாதுகாப்பில் இன்று அவரின் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்றுள்ளது .
Comments
Post a Comment