ஜா-எலயில் 70 இலட்சம் கொள்ளை!
தனியார் தொழிற்சாலை ஒன்றில் சம்பளம் கொடுப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 70 இலட்சம் ரூபா பணம் ஜா-எல- ஏக்கல பகுதியில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதhக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜா எல பகுதியூடாக பணம் எடுத்துச்செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பிற்பகல் 1 மணியளவில் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் அதனைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment