அம்பாறை மாவட்ட சமுர்த்தி விருது வழங்கும் நிகழ்வு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின நிதி சேகரிப்பில் மாவட்ட, பிரதேச செயலக மற்றும் வலய மட்டத்தில் கூடுதல் நிதிகளை சேகரித்த சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் நிசந்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ. அல்விஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் மற்றும் பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இவ்வருடம் திவிநெகும புத்தாண்டு சேமிப்பில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.றிபாயா அரசாங்க அதிபரினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Comments
Post a Comment