சீரற்ற காலநிலை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும்?

தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் இந்த சீரற்ற காலநிலை பெரும் மழையாக இந்து சமுத்திரத்திர நாடுகளான தென்னிந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மழை காலம் முதலில் கேரளாவில் ஆரம்பித்து படிப்படியாக மற்றப் பகுதிகளுக்குப் பரவும் என்றும் வளிமண்டல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதனை அமெரிக்காவின் தேசிய காலநிலை சேவைகள் நிலையமும் ஊர்ஜிதம் செய்துள்ளது.

இந்தப் பலத்த காற்றுடனான பெருமழை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் காலநிலை வங்காள விரிகுடாவின் ஊடாக கிழக்கு இந்தியாவையும் பாதிக்கும் என்றும் காலநிலை அவதானிகள் எச்சரிக்கை செய்கின்றார்கள்.

ஏற்கனவே இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் சீரற்ற காலநிலை தற்போது நீடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி