முதலாம் தரத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
அரசாங்க பாடசாலைகளில் 2014 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கல்வியமைச்சினால் இன்று திங்கட்கிழமை முதல் கோரப்பட்டுள்ளது.
தங்களுடைய பிள்ளைகளை அரசாங்க பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கு விரும்புகின்ற பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள் மாதிரி விண்ணப்பத்திற்கு ஏற்ப தயார் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமக்குப்பொருத்தமான பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் கல்வியமைச்சு கோரியுள்ளது.
விண்ணப்பங்களை 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பவேண்டுமாறும் கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Comments
Post a Comment