கிழக்கு மாகண சபையின் மாவட்ட அபிவிருத்திக்கூட்டம்!
கிழக்கு மாகண சபையின் மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் இன்று திருகோணமலையில்லுள்ள பிரதம செயளாலர் காரியாலயத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாணசபையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களையும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையும் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்து முதலமைச்சர் கிழக்கு மாகாண அமைச்சரவையில் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களிலும் 4 மாதத்திற்கொருமுறை இவ்வாறானதொரு அபிவிருத்திக் கூட்டம் நடைபெறும்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம். சரத் அபய குணவர்தண மற்றும் உயர் அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment