பூ பறிக்க குளத்தில் இறங்கிய இளைஞ்சன் நீரில் மூழ்கி இறந்துள்ளார்
கோயிலுக்கு கொண்டு செல்ல பூ பறிக்க குளத்தில் இறங்கிய இளைஞ்சன் நீரில் மூழ்கி இறந்துள்ளார் . இச்சம்பவம் நேற்று நாவிதன்வெளி அன்னமலை பிர தேசத்தில் இடம் பெற்றுள்ளது.
துறைநீலாவணை 07ஆம் வட்டாரத்தை சேர்ந்த 35 வயதுடைய தேவராசா சந்திரசேகரன் என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
துறை நீலாவணையில் இருந்து 15ஆம் கிராமத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்ற இவர் வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு அன்னமலை காளி கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற இவர் அன்னமலை கோயில் குளத்தில் பூ பறிக்க இறங்கியதை பிரதேசத்தில் உள்ளவர்கள் கண்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இவர் சடலமாக கிடப்பதை கண்ட பொது மக்கள் சவளக்கடை பொலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவரது உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதன் பின்னர் சடலத்தை மீட்டு சவளக்கடை பொலிசார் கல்முனை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பாக சவளக்கடை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment