திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள்!

பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹானா கவுசார் (34) மற்றும் சோபிடா கமார்(29) ஆகிய இருவரும் பதிவாகியுள்ளனர். திருமணப்பதிவாளர் அலுவகத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக அங்கேயே புகலிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தங்களது சொந்த நாட்டு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறியே இருவரும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் மிர்பூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இவர்கள் இருவருக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும் பேர்மிங்காமில் கல்வி கற்கும் போதே பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்