சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசனலியின் பொறுப்பற்ற தனத்தினால் கல்முனையின் அபிவிருத்திக்கு ஆப்பு!


சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசனலியின் பொறுப்பற்ற தனத்தினால் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலைக்கு கிடைக்கவிருந்த அவசர விபத்துப் பிரிவு வேறு வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்விடயம் சம்பந்தமாக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நசீர் கருத்து தெரிவிக்கையில், 

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் அதிகம் பயன் பெற்றுவரும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சுமார் இருபத்து ஐந்து கோடி ரூபாய் செலவில் அவசர விபத்து பிரிவுக்காக சகல உபகரணங்ளுடன் கூடிய நான்கு மாடிக்கட்டிடம் ஒன்று உலக வங்கி நிதி உதவியில் நிர்மாணிக்க பூர்வாக நடவடிக்கைகள் ஏற்பாடாகியிருந்தன. 

சுமார் இரண்டு வருடங்களாக திட்டமிடப்பட்ட குறித்த அவசர விபத்துப் பிரிவு கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொழும்பிலிருந்து மண் பரிசோதனைக்காக ஆவணங்களுடன் வந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு திசை திருப்பப்பட்டுள்ளனர். அங்கு சென்ற சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வடக்கு வைத்தியசாலையில் மண் பரிசோதனை செய்துவிட்டு சென்றுள்ளனர். 

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மண் பரிசோதனைக்காக ஆவணங்களுடன் வந்த அதிகாரிகள் திடீரென கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு திருப்பப்பட்டது தொடர்பாக எனது தலைமையிலான குழுவினர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசனலியையும் நேரடியாக சந்தித்து அவர்களது கவனத்துக்கொண்டு வந்தோம். 

இவ்விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கிடைக்க வேண்டிய அவசர விபத்துப் பிரிவை பெற்றுப்தருவதாக தலைவர் அமைச்சர் ஹக்கீமும், அமைச்சர் ஹசனலியும் உறுதியளித்திருந்தனர். 

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 16ம் திகதி அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக அறிய முடிகிறது. 

எமது அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலைக்கு கிடைக்கவிருந்த அவசர விபத்துப் பிரிவு வேறு வைத்தியாலைக்கு மாற்றப்பட்டதற்கு அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கும் நொண்டிக் காரணங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எமது வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவுக்கு தேவையான இரத்த வங்கி, விடுதி வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இவ்வசதிகளைக் வைத்தே அவசர விபத்துப் பிரிவினை எமது வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கு அமைச்சின் அதிகாரிகள் தீர்;மானித்திருந்தனர். 

இவ்வாறு தீர்மானிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படவள்ள நிலையில் திடீரென இப்பிரிவு வடக்கு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட விடயம் எங்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. 

இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசனலியின் கவனத்து பலமுறை கொண்டு வந்தும் அது பயனிக்கவில்லை என்றார். 

முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் கல்முனையில் மக்கள் அதிகம் பயன் பெரும் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிதாக அபிவிருத்தியை செய்யாவிட்டாலும் தானாக வந்த ஒரு அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க இப்பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசனலியினால் முடியாமல் போனது அவரின் கையாலாகத்தனமா? என அம்பாறை மாவட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி