"ஆள் பாதை ஆடை பாதி" என்று சொல்வோம். இங்கே" பாம்பு பாதி - சிறுமி பாதி" என்று சொல்லும் அளவுக்கு ஒரு சிறுமியைப்பற்றிய அபூர்வ தகவல் இது.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும்
, கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது
8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி
 பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும், தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர்.

இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி, ´செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ்' அல்லது ´ஜிங் ஜிங் நோய்' என்று குறிப்பிடுகின்றனர்.

இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து நாட்டின் மருத்துவ வல்லுனரான டாக்டர் பிங் லாவ் என்பவர் கூறியுள்ளார்.

பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வை தரிசிக்கவும், அவளது உடலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர்,
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக்கிடக்கின்றனராம்.

அவர்கள் வழங்கும் காணிக்கை பணத்தின் மூலம் அந்த பெண்ணின் குடும்ப வருமானமும், வாழ்க்கை தரமும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும், அவர்களின் நிம்மதியும், தனிமையும் தொலைந்துப் போனதாக மய் லி ஃபே-வின் நெருங்கிய உறவினர் ஒருவர் பேட்டியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த அபூர்வ சிறுமியைப்பற்றி கடந்த வருடம் ஏப்ரல் மாதமும் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
என்னே வேடிக்கையான உலகமிது?

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி