தாடி முளைத்த பெண்!
பொதுவாக ஆண்களுக்குத்தான் மீசை ,தாடி என்பன வளர்வதுண்டு.ஆனால்; வழமைக்கு மாறாக ஒரு பெண்ணுக்கு தாடி வளர்ந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்தோனேஷியாவின் பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா (வயது 38). இவருக்கு 19 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.இவருக்கு 25 வயதாக இருக்கும் போது முதல் குழந்தை பிறந்தது, அதன் பின் இவரது முகத்தில் திடீரென முடி முளைக்க ஆரம்பித்தது.
இந்த தாடியை அகற்ற முற்பட்ட போது, கடுமையான வலியினால் அப்படியே விட்டுவிட்டாராம்.இதனால் கடந்த 19 ஆண்டுகளாகவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகத்தை மறைத்தவாறு சென்று வருவதாகவும்; வீட்டிற்குள்ளும் தன்னுடைய குழந்தைகள் பரிகாசம் செய்வார்கள் என்ற பயத்தில் முகத்தை மறைத்தே வாழ்ந்து வருவதாகவும் அகஸ்டினா தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் இவர் முதன் முதலாக முகத்தை மறைக்காமல் வெளியே வந்தபோது, மக்கள் விசித்திரமாக பார்த்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment