பிளாஸ்டிக் போத்தல்களால் கட்டப்படும் வீடு!

தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது.


இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட ஆரம்பத்துள்ளனர். பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் நகரில் வசித்து வரும் இன்கிரிட் வாகா டியாஸ் என்ற பெண்மணியே இந்த புதுவிதமான மாற்றீடினை கண்டுபிடித்துள்ளார்.

பாவித்துவிட்டு குப்பைகளில் வீசப்படும் பழைய பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துள்ளார்.இதனையடுத்து பலரும் இம்முறையில் வீடு கட்டும் முயற்சியை ஆரம்பித்துள்னர்.

தற்போது பொலிவியாவில் மட்டும் இதுவரையில் பத்துக்கும் அதிகமான வீடுகளை பிளாஸ்டிக் போத்தல்களால் குறைந்த செலவில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் வெற்றிபெற்றுள்ளமை தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் வாகா.

ஆம்! வீடு கட்டுவதற்கு கல் மட்டுமல்ல- சிமெந்து மணல்  போன்ற மூலப்பொருட்களுக்கு   தட்டுப்பாட்டை போக்குவதற்கு இந்த பிளாஸ்டிக் போத்தல் வீடமைப்பு முறை மிகவும் சிறந்தது தான் .எவ்வித செலவுமின்றி மிகவும் சுலபமாகவே வீட்டைக் கட்டலாமே? எங்கே முயற்சியுங்கள் பார்ப்போம்? 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது