உலகின் உயரமான மனிதன் திருமண பந்தத்தில் இணைந்தார்
உலகின் உயரமான மனிதனாகக கருதப்படும் 8 அடி 3 அங்குலமான சுல்தான் கொசென் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
ஆம், மேர்வ் டிபோ என்ற 20 வயதான 5 அடி 8 அங்குல உயரமான பெண்ணுடனேயே அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இப்பெண் கொசெனை விட 2 அடி 7 அங்குலம் உயரம் குறைந்தவர்.
இந்நாள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளெனவும், தனது உயரத்தினால் தனக்கான துணை கிடைக்காமையால் கவலையில் இருந்து வந்ததாகவும் ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சுல்தான் கொசென் தெரிவித்துள்ளார்.
அவரது சொந்த நாடான துருக்கியில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
உலகில் இதுவரை சுமார் 10 பேரே 8 அடிக்கு மேல் உயரமானவர்கள் என்பதுடன் அதில் சுல்தான் கொசெனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment