ஒரு மாத குழந்தையை விற்ற குற்றத்தில் மூன்று பேர் கைது

அனா
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு மாத குழந்தையை விற்ற குற்றத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று (03.11.2015) இடம் பெற்றதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமத்தில் வசித்துவந்த திருமணம் முடிக்காத இருபது வயதுடைய பெண் பிள்ளைக்கு கடந்த 2015.10.04ம் திகதி திருகோணமலை வைத்தியசாலையில் வைத்து பெண் பிள்ளை ஒன்று பிறந்துள்ளது அப் பிள்ளையை இருபதாயிரம் ரூபாவிற்கு கடந்த 28.10.2015ம் திகதி பிறைந்துரைச்சேனை பகுதியில் உள்ள ஒரு தம்பதியினருக்கு விற்பனை செய்யப்பட்டள்ளது.
குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர்கள் குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிள்ளையின் தாய் அதனை வாங்கியவர் மற்றும் தரகர் ஆகிய மூவரும் வாழைச்சேனை பொலிஸாரால் நேற்று (03.11.2015) கைது செய்யப்பட்டு நேற்றய தினமே வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஏ.எல்.முனாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 09.11.2015 அன்று மன்றில் ஆஜராகுமாறு கூறி ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியில் சரீர பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் விற்பனை செய்யப்பட்ட ஒருமாத பெண் குழந்தை அடுத்த தவனை வரும்வரை குழந்தையை வாங்கிய தம்பதிகளிடம் இருக்க வேண்டு;ம் என்றும் அடுத்த தவனையில் குழந்தையை மன்றில் ஆஜர்படுத்துமாறும் கட்டளை பிறப்பித்துள்ளார் என்றும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று