20 கிலோ எடையுடன் காட்சியளிக்கும் 8 மாத குழந்தை!

8 மாத குழந்தை ஒன்று 20 கிலோ உடல் எடையுடன் காணப்படுவது கொலம்பியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவை சேர்ந்த யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணி, தனது எட்டு மாத குழந்தை சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரித்து கொண்டே போவதால் அதிர்ச்சியுற்றார்.

இதனையடுத்து குழந்தையின் உடல்நிலையை பற்றி ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக மருத்துவமனைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.இதில்
, தனது குழந்தை அழும் நேரமெல்லாம் உடனடியாக பாலூட்டினார் என்றும் அவன் இவ்வளவு குண்டாவதற்கு தானே காரணமாகிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தை பார்த்த மருத்துவமனை இயக்குநர் சால்வடார் பாலேசியோ கோன்சாலேஸ், அக்குழந்தையை தங்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகிறார்.

தற்போது அவனது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 எடை குறைக்கப்படாவிட்டால் வருங்காலங்களில் அக்குழந்தைக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ இயக்குநர் தெரிவித்துள்ளார்.மேலும் குழந்தை குணமடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என தெரிகின்றது.


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்