கல்முனையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து!







அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதியில் உள்ள கடைத் தொகுதி மற்றும் வைம்சிஏ அலுவலகம் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

கல்முனை பிரதான வீதியில் உள்ள புத்தக விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள கடைத் தொகுதிகளுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தயுள்ளது.

இன்று காலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அந்த புத்தக நிலையமும் அந்த புத்தக நிலையம் உள்ள கல்முனை வைஎம்சிஏ கட்டிடமும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இதன்போது குறித்த புத்தக நிலையத்திலும் வைம்சிஏ அலுவலகத்திலும் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இத் தீ மற்றைய கடைகளிலும் சிறிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அதிகாலை வேளை ஏற்பட்டதனால் தெய்வாதீனமாக எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கடை உரிமையாளர்களும் கல்முனை  பொலிசாரும் பொதுமக்களும் விரைந்து செயல்பட்டு தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவற்கு கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனம், பொது மக்களால் தீ அணைக்கப்பட்டதன் பின்னர் காலை 6.35 மணியளவிலேயே சம்பவ இடத்திற்கு வந்தது.

அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு வந்தபோதும் 5 நிமிட நேரம் மாத்திரமே அது தீயணைப்பில் ஈடுபட்டது. பின்னர் அவ்வாகனத்தில் பழுதேற்படவே மீண்டும் 7.30 மணியளவிலேயே தீயணைப்பில் ஈடுபட்டது.

கல்முனை மாநகர சபையின் இந்த அசமந்தப் போக்குக் குறித்து பொதுமக்களும் நகர வரிகட்டும் கடை உரிமையாளர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இத்தனைக்கும் இக்கட்டடம் கல்முனை நகர மத்தியில் கல்முனை மாநகரசபைக்கு 300 மீற்றர்கள் தொலைவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது