உலகில் மிகவும் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு .


உலகில் மிகவும் செல்வாக்குள்ள  500 முஸ்லிம் பிரமுகர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும்  நிகழ்வு இன்று  சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு விழா நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி கலாநிதி மஹ்ருப் இஸ்மாயில் பிரதம அதிதியாகவும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா விஷேட அதிதியாகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச தவிசாளர் ஏ.எம்.நௌசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனம் , சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் குழு , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு இணைப்பாளர் காரியாலயம் என்பன கூட்டாக இப்பாராட்டு விழா நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது.
தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும் , பிரபல சமூகசேவையாளருமாகும்.











Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று