வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (16) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாகவே பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த கஜ என்ற பாரிய சூறாவளி மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று திகதி அதிகாலை 00.30 மணிக்கும் 02.30 மணிக்கும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கரையைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment