வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல்?
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30 ஆம் திகதி வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கிமீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment