அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளி ஏற்பட வாய்ப்பு


கிழக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும். 

கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தாழமுக்கம் தற்போது ஒரு ஆழமான தாழமுக்கமாக பலமடைந்து தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு மேலாக வட அகலாங்கு 13.1N, கிழக்கு நெடுங்கோடு 90.0E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. 

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்