இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்; இலங்கையிலும் அதிர்வு உணரப்பட்டது


இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்திற்கு அருகில் சற்றுமுன் 8.9 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் இந்துசமுத்திர நாடுகள் பலவற்றில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இப்பூகம்பத்தினால் இலங்கையின் கிழக்கு. மேற்கு, தெற்கு பிரதேசங்களிலும் கட்டிடங்களின் நடுக்கத்தை உணர முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆச்சே மாநில தலைநகர் பண்டா ஆச்சேவிலிருந்து 495 கிலோமீற்றர் தூரத்தில் கடலின் அடியில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்