அழு குரலுடன் தீபம் ஏற்றும் சுனாமி நினைவு கல்முனையில்
யு.எம்.இஸ்ஹாக்
தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று சனிக்கிழமையுடன் 11 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. சிலருக்கு தங்கச் சுனாமி என வர்ணிக்கப்பட்டாலும் அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை, மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும், வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவுகளை அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் நம்மிடையே உள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளுர் நிறுவனங்களும் அமைப்புகளும் பாதிக்கப்படாத மக்களும் குறிப்பாக அரசாங்கமும் காட்டிய காருண்யமான சேவைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூரவேண்டும்.
11 ஆண்டு நிறைவை நினைவு கூரும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது. கல்முனை மாமாங்க வித்தியாலய முற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்களின் அழு குரலுடன் தீபமேற்றி இடம் பெற்றது.
கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சி தலைவர் ஏ.ஏகாம்பரம் உட்பட அரசியல் பிரமுகர்களும் விளையாட்டுத் துறை அமைச்சரின் செயலாளர் திஸா நாயக்க உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர் .
Comments
Post a Comment