நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் றோஸ் இல்லம் சம்பியனானது
நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் இவ்வருட சம்பியனாக 304 புள்ளிகளைப் பெற்று சிவப்பு நிற றோஸ் இல்லம் சம்பியனாக தெரிவாகியுள்ளது.
வித்தியாலய அதிபர் வை.எல் .ஏ.பஸீர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை நற்பிட்டிமுனை தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் லாபீர் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
நடை பெற்ற மைதான சுவட்டு நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிவப்பு நிற றோஸ் இல்லம் 304 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தையும் ,பச்சைநிற ஜெஸ்மின் இல்லம் 282 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் , நீல நிற லோட்டஸ் இல்லம் 260 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று முதலாம் இடத்தைப் பெற்ற றோஸ் இல்லம் இவ்வருட சம்பியன் கிண்ணத்தை வென்றது.
நடை பெற்று முடிந்த இந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் ,கெளரவ அதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா ,எஸ்.எல்.ஏ.ரஹீம் ஆகியோரும் , விசேட அதிதிகளாக கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் உட்பட அதிபர்கள்,பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் ,நற்பிட்டிமுனை கிராமத்தின் தனவந்தர்கள்,பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment