தேசிய விளையாட்டுப்போட்டிக்கு ஒப்பானதொரு நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய வருடாந்த இல்லவிளையாட்டு இறுதிநாள் நிகழ்வு

தேசிய விளையாட்டுப்போட்டிக்கு  ஒப்பானதொரு நிகழ்வாக  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய  வருடாந்த இல்லவிளையாட்டு  இறுதிநாள் நிகழ்வு இடம் பெற்றது .பச்சை நிற ஸபா  இல்லம் ,நீல நிற மினா இல்லம் ,சிவப்பு நிற  அறபா  இல்லம் என மூன்று இல்லங்கள் கலந்து கொண்ட நிகழ்வில் 

சிவப்பு நிற அறபா  இல்லம் 485 புள்ளிகளைப்பெற்று  இவ்வருடத்தில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 437 புள்ளிகள் பெற்று ஸபா  இல்லம் இரண்டாம் இடத்தையும் ,417 புள்ளிகள் பெற்று மினா இல்லம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

கல்லூரி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் தலைமையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு  நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் பீ.எம்.எம்.பதுர்தீன் ,உதவிக்கல்விப்  பணிப்பாளர் யு.எல்.எம்.சாஜித் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் முன்னாள் கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஃபர் மற்றும் முன்னாள் கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் சி.எம்.ஹலீம் உட்பட பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

பத்து நாட்களுக்கும் மேலாக நடை பெற்ற  போட்டிகளில்  ஆரம்பம் முதல்  இறுதிவரையான நிகழ்வுகள் யாவும் விளையாட்டு  கவுன்சில்  செயலாளரும் ,விளையாட்டு  ஆசிரியருமான ஏ.எம். றிலாஸ்  நெறிப்படுத்தலில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது .

நடை பெற்று முடிந்த இல்லவிளையாட்டுப் போட்டி  நூற்றாண்டு  வரலாறு கொண்ட இப்பாடசாலையின் ஐந்தாவது இல்ல விளையாட்டுப் போட்டி என்பதும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டு  முதலாவது இல்லவிளையாட்டுப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.


















Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்