சாய்ந்தமருதில் தங்கம் வென்ற இளைஞர்களுக்கு பாராட்டு ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருதில் தங்கம் வென்ற இளைஞர்களுக்கு பாராட்டு
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 30வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டி மாத்தறையில் இடம்பெற்றபோது 4×100 மீற்றர் அஞ்சல்ஒட்டப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் வரலாற்றில் முதல் முதலாக தங்கப் பதக்கம் வென்ற இளைஞர்களுக்கு சாய்ந்தமருது - மாளிகைக்காடுஜூம்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்பள்ளிவாசல் மக்கள் பணிமனையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது - மாளிக்காடு ஜூம்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிக்காடு ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள்,கல்முனை மாநகர சபை சாய்ந்தமருதுஉறுப்பினர்கள்,அம்பாறை மாவட்ட இளைஞர் பராளுமன்ற உறுப்பினர் இஸட்.எம். ஸாஜீத், அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் எம்.பீ. ரஜாய், ஏ.எம்.றிபாஸ், கல்முனை சாஹிராக்கல்லூரி விளையாட்டு ஆசிரியர் ஏ. பைசர்,இளைஞர் சேவை உத்தியோகத்தர்எம். றியாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த இளைஞர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Comments
Post a Comment