ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “முஸ்லிம் சேவை இணைய வானொலி” ஆரம்பம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “முஸ்லிம் சேவை இணைய வானொலி” சேவை எதிர் வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு ஆறாம் இலக்க கலையகத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் இடம்பெறவிருப்பதாக இனைய வானொலியின் பொறுப்பாளர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.
இதன்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் உயர் பதவிகள் வகித் பேராசிரியர் மர்கூம் டொக்டர் உவையிஸ், ஏ.எம்.காமில் மரைக்கார், வி.ஏ.கபூர், எம்.சி.கபூர், எம்.எஸ்.குத்தூஸ், மௌலவி.இஸட்.எல்.எம்.முஹமட், நூராணியா ஹஸன் மற்றும் ஒலிபரப்பு முன்னோடியும் தயாரிப்பாளருமான எம்.ஏ.எம்.முஹமட் ஆகியோரின் குரல்ஒலிகள் அடங்கிய இறுவெட்டுக்களும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது.
மேற்படி நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்த கொள்ள இருப்பதாகவும் மேற்படி நிகழ்வினை கண்டுகளிக் விரும்புபவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனவும் அங்குரார்ப்பன நிகழ்வினை நேரடி உலிபரப்புச் செய்யவுள்ளதாகவும் இனைய வானொலியின் பொறுப்பாளர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.
Comments
Post a Comment