கடற்படை தளபதி விடுத்துள்ள கோரிக்கை


இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன் இணைந்து விசேட கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான நகர்வுகளை தடுக்க இலங்கை கடற்படையானது, இந்திய அதிகாரிகளிடமும் உதவிகளை கோரியுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் இத்தகையவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்