நற்பிட்டிமுனை விவசாயிகளின் விடயத்தில் சவளக்கடை கமநல சேவை மத்திய நிலையம் அசமந்தப்போக்கு



நற்பிட்டிமுனை கிராம விவசாயிகளுக்கு தங்களின் வயல் வேலைகளுக்கு செல்ல தடை போடப் படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு காலத்திலும் விவசாயிகள் தங்கள் கடமைகளை செய்வதற்கு தடையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் நற்பிட்டிமுனை விவசாயிகளுக்கு  அது சாத்தியமற்று போகின்றது

நற்பிட்டிமுனை கிராமமும் விவசாயிகளும் கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் காணப்படுகின்றது அவர்களது நெற்செய்கை காணி சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குள் அமையப் பெற்றுள்ளது.

சவளக்கடை பொலிஸாரின் அனுமதியை பெற வேண்டுமெனில் அங்குள்ள கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் கல்முனை பிரிவுக்குட்பட்டவருக்கு  நாவிதன் வெளி கிராம சேவகர் அனுமதி வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாட்ட நிலையில் உள்ளனர் இந்த நிலை நீடித்தால் விதைப்பு காலம் நீடிக்கலாமெனவும் சில வேளை நெற்செய்கை கைவிடப்படும் நிலை உருவாகும் எனவும் விவயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்முனையையும் நாவிதன்வெளியையும் பிரிக்கும் கிடங்கி பாலத்துக்கப்பால் செய்வதற்கு பாதுகாப்பு படையினரின் அனுமதி பெறவேண்டியுள்ளது . இந்த அனுமதியை சவளக்கடை  கமநலகேந்திர நிலையம் பெற்றுக் கொடுக்க வேண்டும்  இந்த விடயத்தில் சவழக்கடை கேந்திர நிலைய அதிகாரிகள் அசமந்தப்போக்கில் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர் .

அரசின் திட்டத்துக்கமைய ஊரடங்கு வேளையில் விவசாயிகளின் கடமைகளை செய்ய சம்பந்தப்பட்ட விவசாய திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்