ஜனாதிபதி - நவநீதம் பிள்ளை சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலhன சந்திப்பும்  பேச்சுவார்த்தையும் நேற்று அலரி மாளிகையில் நடைபெற;றது.

அலரி மாளிகையைப் பார்க்க வந்திருந்த பாடசலை மாணவர்களையும் நவநீதம் பிள்ளை சந்தித்து இலங்கையின் சுதந்திரக் கல்வி பற்றி உரையாடினார்.

ஜனாதிபதிக்கும் நவநீதம் பிள்ளைக்கும் இடையில்  நடைபெற்ற சந்திப்பு தொடர்பில்  ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு- மீள்நிர்மாணம்- சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை தன்னால் கண்டுக்கொள்ள முடிந்ததாக நவீபிள்ளை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிற்கு சென்று மக்களை சந்தித்ததுடன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலான உங்களுடைய நோக்கத்தை நான் மதிக்கின்றேன் என்று தெரிவித்துள்ள நவீபிள்ளை நிலையான கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமன்றி மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புனர்நிர்மானத்தை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக தேவையான சட்டங்கள் இயற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டது தொடர்பிலும்  காணாமல் போனதை குற்றமாக கருதி சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும் அவர் வரவேற்றுள்ளார்.




சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதொன்றல்ல என்றும் திடிரென நடைபெறும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையை நாட்டுமக்கள் பக்கசார்பானதாகவே கருதுகின்றனர். உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்றென மக்கள் கருதுகின்றனர்.

என்னுடைய அமைச்சரவையில் பல்வேறு கொள்கைகள்-சிந்தனைகளை கொண்ட குழுவினர் இருக்கின்றனர். எனினும் பொதுகொள்கையின் கீழ் அவர்களை வழிநடத்துவதற்கு தன்னால் முடிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்