நவநீதம்பிள்ளை நாளை இலங்கை வருகிறார்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை நாளை (25) ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் நவநீதம்பிள்ளை எதிர் வரும் ஐந்து நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
நவநீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அவர் செல்லவிருக்கும் இடங்கள் மற்றும் சந்திக்கவுள்ள நபர்கள் குறித்த நிகழ்ச்சி நிரலை வெளிவிவகார அமைச்சு ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்துள்ளது.
இதற்கிணங்க நவநீதம் பிள்ளை வடக்கிற்கும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கும் விஜயம் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெ டுத்துள்ளது.
கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சி செல்லவுள்ள நவநீதம் பிள்ளை- அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிடக் கூடிய வகையில் அங்கிருந்து தரை மார்க்கமாகவே ஏனைய பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார். மேலும் வடக்கில் சிவில் சமூகத்தினரை சந்தித்து உரையாடுவதற்கும் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையுடன் ஜெனீவாவிலிருந்து 05 பேர் கொண்ட குழுவொன்று இலங்கை வருவதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிள்ளை தலைமையிலான குழு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்- அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து உரையாடுவார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் நவநீதம் பிள்ளை நாட்டில் முன்னெ டுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகளை நேரில் பார்வையிடுவதன் மூலம் ஜெனீவா விலுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கைக்கெதிராக எழுந் துள்ள அழுத்தங்களுக்கு தீர்வு கிடை க்குமென அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது
Comments
Post a Comment