கல்முனை பிரிலியன்ட் கழகத்தின் 300வது உதைபந்தாட்டப் போட்டி


யு.எம்.இஸ்ஹாக் 
 கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300வது உதைபந்தாட்டப் போட்டி இம்மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் கல்முனை பிர்லியண்ட்  கழகமும் மாவனல்லை யுனைடட் கழகமும் மோதவுள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்  ஊடக மாநாடு  கடந்த சனிக்கிழமை  கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் விளையாட்டுக் குழுவின் தலைவர் எஸ்.எல்.யஹ்யாகான் தலைமையில் இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில கழகத்தின் செயலாளர் எஸ்.ரீ.எம்.பஸ்வாக் , பொருளாளர் எம்.எம்.ஏ.றஸாக் , பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம்.பளீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு கழகத்தின் செயலாளர் எஸ் ரீ.எம்.பஸ்வாக் கருத்துத் தெரிவிக்கையில்;
“கல்முனை பிராந்திய உதைபந்தாட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ள கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 1991 ஆம் ஆண்டு ஆரம்பித்த உதைபந்தாட்ட பயணம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 300வது போட்டியாக தடம் பதிக்கவுள்ளது.
இலங்கை உதைபந்தாட்ட சங்கம் 2010 ஆம் ஆண்டு கொழும்பு ஸீ.ஆர்.எப்.சி.விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற டிவிசன் 2 பிரிமியர் லீக் உதைந்தாட்ட சுற்றுப் போட்டியில் வட கிழக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக கல்முனையைச் சேர்ந்த ஒரு விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தைப் பெற்றது வரலாற்று சான்றாகும்.
22 வருடகால உதைபந்தாட்ட வரலாற்றில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 299 போட்டிகளில் கலந்து கொண்டு 161 போட்டிகளில் வெற்றியும் ,46 போட்டிகளில் வெற்றி தோல்வியின்றியும் 92 போட்டிகளில் தோல்வியனையும் சந்தித்துள்ளது.



வெள்ளிக்கிழமை  பிரிலியன் விளையாட்டு கழக தலைவர் ஐ.எல். சம்சுதீன்  தலைமையில்  இடம்பெறவுள்ள 300வது போட்டி நிகழ்வில் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாகவும். கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  கௌரவ அதிதியாகவும் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.ரியாஸ் ,முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர்  கே.எம்.ஏ.ரஸாக்  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், அம்பாறை மாவட்ட உதய் பந்தாட்ட சங்க தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  சட்டத்தரணி ஏ.எம்.ரகீப் , ஷாம்  ரவல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.பைசால் ஆகியோர்  விசேட அதிதிகளாகவும்  கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் ” என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு  கல்முனை பிற தேசத்தில் புகழ் பூத்த  கால் பந்து விளையாட்டு வீரராக திகழ்ந்த  ரஹீம்  இவ்வைபவத்தில் பாராட்டி கௌரவிக்கப் பாடவுள்ளார் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று