கல்முனை பிரிலியன்ட் கழகம் 300வது உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி!


கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300வது உதைப்பந்தாட்டப் போட்டி  (23) வெள்ளிக்கிழமை மாலை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இவ்வுதைப்பந்தாட்ட போட்டியில் மாவனல்ல யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்துடன் பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் போட்டி ஆரம்பித்து 20 நிமிடங்களில் பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் முன்னணி வீரர் எம்.சீ. ஹாறூன் எதிரணிக்கு முதலாவது கோலை புகுத்தினார். இறுதியில் மேலும் மூன்று கோல்கள் புகுத்தப்பட்டது. இதன் மூலம் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகம் 4 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றிக்கேடயமும் பணப்பரிசும் பிரதம அதிதி உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. 2ம் இடத்தைப் பெற்ற மாவனல்ல யுனைட்டெட் கழகத்திற்கும் பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.


300வது போட்டியின் இறுதி நிகழ்வின்போது, கல்முனை பிரதேசத்தின் நட்சத்திர உதைபந்தாட்ட வீரர் எம். ஸி. றஹீம் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். விசேடமாக 300வது போட்டியின்போது பார்வையாளர் பரிசுத்திட்டம் ஒன்றையும் குழுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

இப்போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவும், கல்முனை மாநகர மேயர் ஸிராஸ் மீராசாஹிப் கௌரவ அதிதியாகவும், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. றஸாக் (ஜவாத்) ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க தலைவரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கொழும்பு சஹாம் ரெவல்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ. ஸி. பைஸால் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.






Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று