ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி!
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களின் குடும்பங்களுக்கான ‘ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி’ கடந்த சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சம்மேளத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறியவர்கள் பெரியவர்களுக்கான பலூன் உடைத்தல், அப்பம் சாப்பிடுதல், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், சாக்கோட்டம், தவழ்தல், கூடையில் பந்து போடுதல் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் நடைபெற்றன.
மாவட்ட சாரணிய ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, எம்.எல்.எம்.ஜமால்தீன் ஆகியோர் போட்டிக்களை நெறிப்படுத்தினார்கள்.
விஷேட விருந்தினராக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் என்.எம்.எம்.நௌசாட் கலந்து கொண்டார்.
Comments
Post a Comment