கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்

இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி விளையாட்டு மைதானத்திலே இன்றும் நாளையும் (17, 18) நடைபெறவுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி 210 வீர, வீராங்கனைகள் கலந்து இவ் விளையாட்டு விழாவில் முதலாவது நாள் நிகழ்வு காலை 8.30 மணிக்கு இடம்பெறும் இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். அமலநாதன் கலந்துகொள்கிறார்.
இரண்டாம் நாளான நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம். ஐ. எம். மன்சூர், கெளரவ அதிதியாக மாகாண பிரதம செயலாளர் அபய குணவர்தனவும் கலந்து கொள்கின்றார்கள். இந்நிகழ்வு ஞாயிறு மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண மாகாணத்திலிருந்து பங்குபற்றி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட 71 வீர வீராங்கனைகளும் 13 பயிற்றுவிப்பாளர்களுக்கும் பணப் பரிசில்களும் ஞாபகார்த சின்னங்களும் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது இதனை ‘வரணவிழா’ என அழைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது