பேச்சுக்கு கூட்டமைப்பு தயார்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு!!
இனப்பிரச்சினை தீர்விற்காக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுக்களை அரசுடன் ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தாயாராகவுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எங்களிடம் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை, அரசியல் தீர்வொன்றை காண்பது குறித்து உறுதியாகவுள்ளோம். நாங்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று தெரிவித்து எங்களுடன் பேச முடியாது என அரசாங்கம் தற்போது தெரிவிக்கிறது.
அரசாங்கம் பொய்யான காரணங்களைக் காட்டி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பை தட்டிக்கழிக்க முயல்கிறது எங்களுடன் பேச்சுக்களை மேற்கொள்வதிலிருந்து பின்வாங்கியது அரசாங்கமே. அது தற்போது பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்புக்காக காத்திருப்பதாக தெரிவிப்பது ஆச்சரியமளிக்கின்றது - என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment