கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை நாளை அங்குரார்ப்பணம்

கிழக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை நாளை  2014.09.01 ம் திகதி சம்பிரதாயபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் ஆகியோர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்;;ப்பாசனம், வீடமைப்பும் மற்றும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்;களின் அழைப்பின் பேரில் வருகை தரவிருக்கும் ஆளுநர்; மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரினாலேயே பொது மக்கள் பயன்பெறும் வண்ணம் இவ்வதிகாரசபை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கல்வி, காணி மற்றும் காணி அபிவிருத்தி, கலாசார அமைச்சர் விமலவீர திஸாநாயக, சுகாதார, சுதேச வைத்தியம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், விவாசாய, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சர் இஸட். ஏ. ஹாபிஸ் நஸீர் அகமட், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதி மற்றும் பிரதி தவிசாளர் எம். எஸ். சுபைர் ஆகியோரும் கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர்கள், பிரதம செயலாளர், திரு. டீ.எம்.எஸ்.அபேகுணவர்த்தன மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மற்றும் அரச உயரதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்