கிராமசேவகர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம சேவைகள் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம சேவகர்களை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மேலும் சுமார் 1600 வெற்றிடங்கள் தற்போது நிலவுவதாகவும் அவற்றை நிரப்பும் வகையில் 1000 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் ஏற்கனவே நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்ததாக அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களிலிருந்து நேர்முகப் பரீட்சை மூலம் மேலும் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே நாடளாவிய ரீதியில் 4000 கிராம சேவகர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்