கல்முனை அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்
கல்முனை பிரதேசதில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கல்முனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், வாழ்வாதார அபிவிருத்தி வேலைதிட்டங்கள், பாடசாலைகள் சார்ந்த அபிவிருத்தி முன்னெடுப்புகள் போன்றவற்றின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அவற்றை துரிதமாக பூர்த்திசெய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment