மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனிமேல் இல்லை
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு டிசம்பர் 31 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கப்பட மாட்டது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment