கல்முனை மாநகரத்தை ஒளியூட்டும் செயற்திட்டம் திறந்துவைப்பு
இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட நவீன தெருமின்விளக்கு தொகுதியினை மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து குறித்த தெருமின்விளக்கு தொகுதியினை ஒளியூட்டி திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்ற ரவூப் ஹக்கீமையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எச்.எம்.எம். ஹரீஸையும் வரவேற்கும் முகமாக கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவட்டத்திலிருந்து கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற 'எழுச்சிபெற்று எழுவோம்' எனும் தொணிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்ட மேடைக்கு அவர்களை ஊர்வலமாக பெருந்திரலான கட்சிப் போராளிகள் அழைத்து வந்தனர்;.
Comments
Post a Comment