2018 A/L பெறுபேறுகள்; அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர்

2018-வௌியிடப்பட்ட, 2018 கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் அகில இலங்கை ரீதியாக, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தளை சாஹிரா கல்லூரி மாணவன், எம்.ஆர்.எம். ஹக்கீம் கரீம், 3 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன், மொஹிதீன் பாவா ரீஸா மொஹமட், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை, கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் (321,469) பரீட்சை எழுத தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 167,907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, பரீட்சைக்கு தோற்றியோரில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Biological Science)
1 ஆம் இடம் – கலனி ராஜபக்ஷ, கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை
2 ஆம் இடம் – ரவிந்து ஷஷிக, கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி
3 ஆம் இடம் – மொஹம்மட் றிஸ்மி மொஹம்மட் ஹக்கீம் கரீம், மாத்தளை சாஹிரா கல்லூரி
பௌதிக விஞ்ஞானப் பிரிவு (Physical Science)
1 ஆம் இடம் – ச்சத்துனி ஹங்சனி விஜேகுணவர்தன, கொழும்பு விசாக்கா மகளிர்  வித்தியாலயம்
2 ஆம் இடம் – ச்சாமிந்து சுரான் லியனகே, காலி ரிச்சட் கல்லூரி
3 ஆம் இடம் – தெவிந்து ஜனித் விஜேசேகர, கொழும்பு றோயல் கல்லூரி
வர்த்தகப் பிரிவு (Commerce)
1 ஆம் இடம் – கசுன் இந்துரங்க விக்ரமரத்ன, குருணாகல் மலியதேவ வித்தியாலயம்
2 ஆம் இடம் – உச்சினி அயத்மா ரணவீர, கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை
3 ஆம் இடம் – மலித்தி ஜயரத்ன, கொழும்பு மியூசியஸ் கல்லூரி
கலைப் பிரிவு (Arts)
1 ஆம் இடம் – சேனாதி தம்யா டி அல்விஸ், பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை
2 ஆம் இடம் – எதிரிசிங்க முதியன்சலாகே சித்மி நிமாஷி, குருணாகல் மகளிர் மகா வித்தியாலயம்
3 ஆம் இடம் – பிட்டிகல ஆராச்சிகே இஷானி உமேஷா குமாரி, கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை
பொறியியல் தொழில்நுட்ப பிரிவு (Engineering Technology)
1 ஆம் இடம், மஹா பத்திரனலாகே பமுதித்த யசாஸ் பத்திரண – கொழும்பு ஆனந்தா கல்லூரி
2 ஆம் இடம் – சமரநாயக்க தரிந்து ஹேஷான், கொழும்பு ஆனந்தா கல்லூரி
3 ஆம் இடம் – முதியன்சலாகே செஷான் ரங்கன விஜேகோன், நிக்கவரெட்டிய மஹாசேன் தேசிய பாடசாலை
உயிரியல் தொழில்நுட்ப பிரிவு (Bio-Systems Technology)
1 ஆம் இடம் – சந்துனி பியுமாஷா கொடிப்பிலி, கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம்
2 ஆம் இடம் – மொஹிதீன் பாவா ரீஸா மொஹமட், சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம்
3 ஆம் இடம் – அலங்காரகே விசிந்து திலெங்க லக்மால், ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்