கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் சமய ஆராதனை வழிபாடு
கல்முனை நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களிலொன்றான மெதடிஸ்த திருச்சபையின் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் சமய ஆராதனை வழிபாடுகள் சிறப்பாக நடை பெற்றன .
கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் போதகர் அருட் பணி எஸ்.டி. வினோத் அடிகளார் வழிபாடுகளை நடாத்தினார். கல்முனை சேகர மக்கள் பலர் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில் வட மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்குண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு மீண்டும் செல்ல விசேட பிரார்தனையும் அங்கு இடம் பெற்றது.
நத்தார் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும் இவ்விழாவானது கிறிஸ்துவ திரு வழிபாட்டு ஆண்டில் திரு வருகைக் காலத்தினை முடிவு பெறச் செய்து பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்
நத்தார் பாப்பா இவாழ்த்து அட்டைகளையூம் பரிசுகளையூம் பரிமாறல் இகிறிஸ்மஸ் மரத்தை அழகு படுத்தல் கிறிஸ்மஸ் பாடல் என்பன இடம் பெறுவது சிறப்பம்சமாகும்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் மெதடிஸ்த திருச்சபையில் ஒன்று கூடி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் பரஸ்பர வாழ்த்துக்களைப் பரிமாறி பரிசுகளும் வழங்கியதோடு வறியவர்களுக்கு உதவிகளும் வழங்கினர்.
Comments
Post a Comment