மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி நியமனம்.


(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி இன்று(28-12-2018)தனது கடமையைப் பொறுப்பெற்றார்.

இவர் 1971.01.01ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று மருத்தவத்துறைக்குத் தெரிவாகி கொழும்;பு களணி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்.

அதன் பின் 2000.04.01ஆம் திகதி டொக்டராக முதல் நியமனம் பெற்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையேற்று 2003ஆம் ஆண்டுவரை அங்கு கடமையாற்றினார்.அதைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டுவரை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் கடமையாற்றினார்.

பின்னர் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரை ஓம்மான் நாட்டின் இரணுவ வைத்திய சாலையில் கடமையாற்றினார்.அங்கிருந்து வருகைதந்து மீண்டும் மருதமுனை வைத்திய சாலையில் கடமையாற்றிய நிலையிலேயே இவர் மருதமுனை பிதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையைப் பொறுப்பெற்றுள்ளார்.

இவர் மருதமுனையைச் சேர்ந்த அப்துல் றகுமான் ஆயிஷா தம்பதியின் புதல்வராவார்.

மருதமுனை பிதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ழார் சாய்ந்தமருது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக இன்று(28-12-2018)தனது கடமையைப் பொறுப்பெற்றார். 
 

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்