கிழக்கு கடலோரங்களில் இடியுடன் மழை பெய்யலாம்?
கிழக்கு கடலோரங்களில் இன்று (20) இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கு கடலோரங்களில் மழைக்கான காலநிலையே தொடர்வதுடன், கடலோரங்கள் அனைத்தும் கடினமாகவே காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மன்னார் அம்பாந்தோட்டை ஊடாக கொழும்பு காலி மாத்தறை வரையான கடலோரங்களிலும் மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. மேலும் தென்மேல் கடலோரங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் குறிப்பாக மாலை 04 மணியிலிருந்து 08 மணி வரைக்கும் இடையிலான காலப்பகுதியில் இடியுடன் கூடிய சிறிதளவிலான மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கு கரையோரமாக காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு 20 - 25 கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment